ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-29 18:41 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை த

விருதுவிர வேறு எந்த பணியும் வழங்கக்கூடாது. பள்ளி இறுதித்தேர்வு நெருங்கும் சமயத்தில் மண்டல ஆய்வுகளை நடத்தி கற்பித்தல் பணியை முடக்குவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்