மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-18 22:50 GMT

கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதனை கைவிட வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சேலத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பிலால், முகம்மது விகாயத்துல்லா, மாவட்ட பொதுச்செயலாளர் ஷெரிப் பாஷா ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஷபீக், மாவட்ட தலைவர் அப்சர் அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், ம.தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்