ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
விருதுநகர் அகமதுநகர் மின்வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜே.சி.டி.யு. அமைப்பின் தலைவர் தேனி வசந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.