விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர் ரெயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ஓசூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தரக்குறைவாக பேசியதாகவும், அவரை கைது செய்ய கோரியும், மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன் தலைமை தாங்கினார். ஓசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். இதில், கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் செந்தமிழன், ஓசூர் நகர செயலாளர் கிருஷ்ணன், நகர தொண்டரணி அமைப்பாளர் சூர்யவளவன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய துணை செயலாளர், மாரப்பா, மகளிர் அணி பொறுப்பாளர் ராஜேஸ்வரி, ராஜகோபால், உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அர்ஜுன் சம்பத்தின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர்.