கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் பதிவாளரின் செயல்பாடுகளை கண்டித்து கிருஷ்ணகிரி இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவிசோனா பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், நகராட்சி பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா, சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் மணி, வட்ட கிளை பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுபப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.