காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-06 18:45 GMT

பா.ஜ.க.வினரும் மற்றும் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியை பத்து தலை ராவணன் போல சித்தரித்து விமர்சித்து வருவதாகவும், அதை கண்டித்தும் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க. அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார். அதன்படி நாமக்கல்லில் நேற்று பா.ஜ.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் திரள ஆரம்பித்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ராகுல்காந்தியை விமர்சிப்பதை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதில் நாமக்கல் நகர தலைவர் மோகன், வட்டார தலைவர்கள் தங்கராஜ், ஜெகநாதன், பேரூர் தலைவர்கள் செல்வ சேகரன், சிங்காரம், சீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் மாநில மாணவர் காங்கிரஸ் செயலாளர் பாலாஜி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்