சந்திரபாபுநாயுடுவை விடுதலை செய்யக்கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சந்திரபாபுநாயுடுவை விடுதலை செய்யக்கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-09-26 19:30 GMT

ஓசூர்:

ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை முறைகேடு வழக்கில் ஆந்திர அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை விடுதலை செய்யக்கோரி ஓசூரில், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோபால், ஸ்ரீராமுலு உள்ளிட்ட ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் பொய்யான வழக்கு தொடுத்து கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்