தர்மபுரியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-09-08 19:45 GMT

தர்மபுரி

தர்மபுரி வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சீனிவாசன், பொருளாளர் சிவப்பிரகாசம், நகர பொறுப்பாளர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எமிஸ் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது. ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆசிரியர்களையே நியமிக்க கூடாது. அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். பயிற்சி ஆசிரியரை கொண்டு ஆய்வு செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்