கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புசெவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-26 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தமிழ்வாணி, மாவட்ட செயலாளர் புஷ்பவள்ளி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். உறுப்பினர்கள் புனிதா, கார்த்திகா ஆகியோர் நன்றி கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில், பொது மருத்துவம், நோய்த்தடுப்பு மருந்து இயக்குனரகத்தின் கீழ் உள்ள வழிகாட்டி செவிலியர் பணியிடங்களை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு சரண்டர் செய்யக்கூடாது. பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்