தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புமாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-24 19:30 GMT

தர்மபுரி:

தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான கிளை மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நித்யா தலைமை தாங்கினார். ஆனந்தி முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, கரூரான், தமிழ்ச்செல்வி, திருஞானம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணிகளில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். ரூ.5000 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், செல்வராஜ், மணிகண்டன், கதிர்வேல், நாகராஜன், பத்மநாபன் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டம் பொருளாளர் ஜெபியுல்லாகான் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்