நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இடித்து அகற்றம்

நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கோர்ட்டு உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2023-02-24 13:20 GMT

கலசபாக்கம்

நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கோர்ட்டு உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காரவாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை ஏரிக்கு சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூட்டுறவு நியாய விலை கடை, மகளிர் சுய உதவி குழு கட்டிடம், சமுதாய கட்டிடம், பொது கழிப்பறை கட்டிடம், குப்பை சேமிப்பு கிடங்கு கட்டிடம் உட்பட சுமார் 6 கட்டிடங்களும் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகமும் நீர்ப்பிடிப்பு பகுதியிலேயே கட்டப்பட்டு வந்தது. ஆனால் நீர் பிடிப்பு பகுதிகளில் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது என கோர்ட்டு விதிமுறைகள் வகுத்துள்ளது. அதனை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கடலாடி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல புகார் மனு அளித்திருந்தார். நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களை அனைத்தையும் அகற்ற வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.இதனை தொடர்ந்து சிங்காரவாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகளி இடித்து அகற்றி தரமட்டமாக்கினார். இதனையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்