ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இடிப்பு

ஆணைக்காரன்சத் திரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது

Update: 2023-03-15 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு சொந்தமான ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கொள்ளிடம் ரெயில் நிலையம் அருகே இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் தான் ஆணைக்காரன்சத்திரம் பேரூராட்சி அலுவலகமும் இயங்கி வந் தது. இந்த பழமையான கட்டிடத்தில் வைத்து உரிய அனை த்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து இந்த கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று இந்த பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டது. இக்கட்டிட வளாகத்தில் அமைந் துள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடமும் இடிக்கப்பட்டது. இதனால் இங்கு இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலகம் தற்காலிகமாக குட்டியாவெளி கிராமத்தில் உள்ள சேவை மை ய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்