ராமேசுவரம் ெரயில் நிலையத்தின் முகப்பு கட்டிடம் இடிப்பு

ராமேசுவரம் ெரயில் நிலையத்தின் முகப்பு கட்டிடம் இடிப்பு

Update: 2023-05-13 18:45 GMT

ராமேசுவரம்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் ராமேசுவரத்திற்கு காசி, வாரணாசி, ஒடிசா, அயோத்தியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரெயில்கள் வருகின்றன. ராமேசுவரம் கோவிலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் ராமேசுவரம் ரெயில் நிலையத்தை அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான நிதியையும் ஒதுக்கி உள்ளது. இதையடுத்து ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி நிதியில் விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதற்காக பல ஆண்டு காலமாக இருந்த ரெயில் நிலையத்தின் முகப்பு கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்தது. இந்த கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு கற்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படுகின்றன. தொடர்ந்து ரெயில்வே நிலையத்தின் வளாகப் பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்