கூட்டுறவு சங்க கட்டிடம் இடிப்பு

மயிலாடுதுறையில் கூட்டுறவு சங்க கட்டிடம் இடிக்கப்பட்டது

Update: 2022-09-22 18:45 GMT

மயிலாடுதுறையில், 1958-ம் ஆண்டு மயிலாடுதுறை கூட்டுறவு கட்டிட சங்கத்தின் சார்பில் 60 மனைகள் கொண்ட கணபதி நகர் குடியிருப்பு மனைகள் அமைக்கப்பட்டது. அந்த மனைகளுக்கு மத்தியில் பூங்காவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஒரு பகுதியில் மயிலாடுதுறை கூட்டுறவு சங்கத்திற்கான கட்டிடம் 1964-ம் ஆண்டு நகராட்சியில் அனுமதி பெற்று கட்டப்பட்டு அலுவலகம் இயங்கி வந்தது. இந்தநிலையில் அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் நேற்று முன்தினம் நகராட்சி அதிகாரிகள் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். முன்னதாக அந்த கூட்டுறவு சங்கத்தில் இருந்த ஆவணங்கள், பீரோ, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை சாலையோரம் எடுத்து வைக்கப்பட்டன. சங்கத்தின் செயலாளர் ரமேஷ், ஆவணங்கள் மற்றும் பீரோக்களை அருகில் உள்ள வீடுகளில பாதுகாப்பாக வைத்தார். அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்கத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் ஆவணங்களை வெளியில் வைத்து விட்டு நகராட்சி ஊழியர்கள் கட்டிடத்தை இடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்