உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தில் இருந்து கோட்டப்பாளையம் செல்லும் சாலையில் சுமார் 250 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவிலின் சுவர்கள் மற்றும் மேல்தளம் வலுவிழந்ததால் கோவிலை இடித்துவிட்டு, புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, சாமி சிலைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் கோவில் இடிக்கப்பட்டது.