புதிதாக கட்டிய 2 கோவில்கள் இடித்து அகற்றம்

பொதுப்பயன்பாட்டிற்கு ஒதுக்கிய இடத்தில் புதிதாக கட்டிய 2 கோவில்களை இடித்து அகற்றினர்.

Update: 2023-05-02 18:45 GMT

கோவையை அடுத்த இடிகரை பேரூராட்சி வெற்றி வேலா நகர் மற்றும் ராகவேந்திரா கார்டன் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள பொது பயன்பாட்டிற்கு ஒதுக் கப்பட்ட இடத்தில் (ரிசர்வ் சைட்) கடந்த ஆண்டு விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அந்த கோவில்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மண்டல பூஜையும் நடைபெற்று வந்தது. மேலும் ரிசர்வ் சைட்டில் விநாயகர் கோவில் கட்டப்பட்டதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அந்த பகுதி மக்கள் இடிகரை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இடிகரை பேரூராட்சி அதிகாரிகள் நேற்று காலை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் வெற்றி வேலா நகர் மற்றும் ராகவேந்திரா கார்டனில் கட்டப்பட்டிருந்த 2 விநாயகர் கோவில்களை இடித்து அகற்றினர்.

இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் பேரூராட்சி அதிகாரிகள் கோவிலை இடித்து அங்கிருந்த சிலைகளை பேரூராட்சி அலுவல கத்திற்கு எடுத்து சென்றனர். இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்