ஊருணிகளை தூர்வார கோரிக்கை

ஊருணிகளை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-02 19:08 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் பகுதியில் கொங்கன்குளம், ரெட்டியபட்டி, கீழராஜகுலராமன், வி.புதூர், காளவாசல், கரிசல்குளம், சங்கரமூர்த்திபட்டி, கண்மாய் பட்டி, வலையபட்டி, மேலாண் மறைநாடு உள்பட 25 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் ஊருணிகள் உள்ளன. இந்த ஊருணிகள் தான் கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த ஊருணிகள் தூர்வாரப்படாமல் மண் மேவி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்க முடியாத நிலை உள்ளது. எனவே அனைத்து ஊருணிகளையும் தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதுடன் தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்