சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற கோரிக்கை

சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-11 18:34 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், புகழூர், தவிட்டுப்பாளையம், நடையனூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தார் சாலை ஓரங்களில் விளம்பர பதாகைகள் ஆங்காங்கே மிக உயரமாகவும், நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து எந்த உள்ளாட்சி நிர்வாகேமா, அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது வைகாசி மாதம் காற்று அதிகம் வீச தொடங்கி விட்டதால் விளம்பர பாதாகைகள் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்