ஆவின் பால் விநியோகம் தாமதம்: 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் இருவர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமான விவகாரத்தில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் இருவர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் (பொறியியல்) தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.