முதல்-அமைச்சர் குறித்து அவதூறு சுவரொட்டிகள்: இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு சுவரொட்டிகள்: இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் -ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-09-27 18:59 GMT

சென்னை,

வட சென்னை பகுதியில் கடந்த 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வடக்கு கடற்கரை, எஸ்பிளனேடு மற்றும் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தேடப்படும் பா.ஜ.க.வைச் சேர்ந்த மண்ணடி ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகம், ரமேஷ் சார்பில் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இருவரும் மதுரையில் 3 வாரம் தங்கியிருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்