நாய் கடித்ததில் பெண் மான் பலி

கெங்கவல்லியில் நாய் கடித்ததில் பெண் மான் பலி;

Update: 2023-06-17 19:59 GMT

கெங்கவல்லி 

கெங்கவல்லி பேரூராட்சி மொட்டை பாலம் அருகே உள்ள மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி 10-க்கும் மேற்பட்ட மான்கள் மலையடிவார பகுதிக்கு வந்து சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் நேற்று 2 வயதுடைய பெண் மான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக மொட்டை பாலம் அருகே வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் உள்ள நாய்கள் மானை கடித்ததில் மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து இறந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்