நாய்கள் கடித்து குதறியதில் மான் சாவு

கோவில்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் இறந்தது.

Update: 2023-03-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலை பகுதியில் நேற்று ஆண் புள்ளிமான் ஒன்று சுற்றி திரிந்தது. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள நாய்கள் புள்ளி மானை துரத்தி சென்று கடித்துக்குதறியது. இதில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து மானை மீட்டு கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோடை காலம் தொடங்கி உள்ளதால் தண்ணீர் தேடி மான்கள் அதிகளவு வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. எனவே கோவில்பட்டி குருமலை அருகே உள்ள காப்புகாட்டில் மான்களுக்கு தேவையான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்