தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

Update: 2022-10-21 11:56 GMT

உடுமலை

தீபாவளியைதீ விபத்தில்லாத தீபாவளியாக கொண்டாட, தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

விழிப்புணர்வு பிரச்சாரம்

உடுமலையில், தீ விபத்தில்லாத தீபாவளியாக இருப்பதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உடுமலை, தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் துண்டுபிரசுரம் அச்சிடப்பட்டுள்ளது.

அதை உடுமலை தீயணைப்பு துறையினர் மத்திய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், உழவர் சந்தை, கடைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த துண்டுபிரசுரத்தில்கூறப்பட்டிருப்பதாவது.

பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.ஓரிரு வாளிகள் (பக்கெட்டுகள்) நிறைய தண்ணீர் மற்றும் மணல் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட ஊதுவத்திகளை உபயோகித்து பக்கவாட்டில் பட்டாசு கொளுத்துவது நல்லது.அவ்வாறு செய்யும்போது முகத்தை வேறு பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்.எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீருள்ளவாளியிலோ

அல்லது உலர்ந்த மண்ணிலோ முக்க வேண்டும்.வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக்கூடாது.பட்டாசு வெடிக்கும்போது நைலான், சில்க் துணி ஆடைகளை தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. பட்டாசு கடைகள், கியாஸ் கிடங்குகள், உணவுப்பொருள் சேமிப்பு

கிடங்குகள், வைக்கோல்போர், மருத்துவமனைகள், பெட்ரோல்பங்க், மின்மாற்றிகள், சந்தை ஆகிய இடங்களில் பட்டாசுவெடிக்கக்கூடாது.

பாட்டில் மற்றும் டப்பாக்களில் பட்டாசுவெடிக்கக்கூடாது.

ஆடையில் தீ பிடித்தால் ஓடாமல் தரையில்படுத்து உருள வேண்டும். தீப்புண்கள் ஏற்பட்டால் குளிர்ந்த நீர் ஊற்றி மெல்லிய துணியால் மூடி மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அழுத்தி துடைக்கக்கூடாது.இங்க், ஆயில்

போன்றவற்றைபுண்கள்மீதுஉபயோகிக்கக்

கூடாது.உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்தால் போலீஸ் நிலையத்திற்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும் தகவல் தெரிவிக்கவும்.

மேற்கண்டவாறு அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

---

Image1 File Name : 13467031.jpg

----

Reporter : A. Stephen Location : Tirupur - Udumalaipet - Udumalai

Tags:    

மேலும் செய்திகள்