இரையுமன்துறை கடற்கரையில் அழுகிய நிலையில் பெண் பிணம்

இரையுமன்துறை கடற்கரையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது.;

Update: 2022-08-28 13:53 GMT

கொல்லங்கோடு:

இரையுமன்துறை கடற்கரையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது.

நித்திரவிளை அருகே உள்ள இரையுமன்துறை கடற்கரையில்  அப்பகுதி மீனவர்கள் கரைமடி மீன்பிடிப்புக்கு சென்றனர். அப்போது, அழுகிய நிலையில் ஆடைகளின்றி ஒரு பெண் பிணம் கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மீனவர்கள் இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கும், குளச்சல் கடலோர பாதுகாதுப்பு குழும போலீசாருக்கும் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய பெண்ணுக்கு சுமார் 60 வயது இருக்கும் என்றும், கடற்கரை கிராமங்கள் மற்றும் பிற பகுதிகளில் பெண்கள் யாரேனும் மாயமாகி உள்ளனரா என விசாரணை நடத்தினர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து கடலில் வீசி சென்றார்களா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடற்கரையில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கரை ஒதுங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்