7 சிவன் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்-பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேடை மாவட்டத்தில் 7 சிவன் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ராணிப்பேடை மாவட்டத்தில் 7 சிவன் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழமையான கோவில்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஷடாரண்ய ஷேத்திரங்களான காரை கிருபாம்பிகை சமேத கவுதம ஈஸ்வரர் கோவில், வன்னிவேடு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில், குடிமல்லூர் திரிபுரசுந்தரி சமேத அத்திரியீஸ்வரர் கோவில், மேல்விஷாரம் வடிவுடையம்மாள் சமேத வால்மீகிஸ்வரர் கோவில், வேப்பூர் பாலகுஜாம்பிகை சமேத வசிஸ்டேஸ்வரர் கோவில், புதுப்பாடி தர்ம சம்வர்த்தினி சமேத பரத்வாஜேஸ்வரர் கோவில், அவரக்கரை பர்வதவர்த்தினி சமேத காச்யபேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்தக் கோவில்கள் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோவில்களில் சாமி தரிசனம் செய்தால் பிரார்த்தனை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்தக் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலமாக கோவில்களின் தல வரலாற்றை பொதுமக்கள் கூடம் இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
பக்தர்கள் கோரிக்கை
கயிலாயத்தில் சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடந்த போது, அதைப் பார்ப்பதற்காக 7 முனிவர்கள் கயிலாயத்துக்கு புறப்பட்டனர். போகும் வழியில் இயற்கை சீற்றமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் முனிவர்கள் திருக்கல்யாணத்தில் பங்கேற்க முடியவில்லை. முனிவர்களின் நிலைமையை உணர்ந்த கயிலாயநாதன், 7 முனிவர்கள் முன் தோன்றிய சிவன், அம்பாள், அவர்களுக்கு சிவன்-பார்வதி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்தார். இந்தக் கோவில்களில் குடிநீர், மின்விளக்கு, போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே கோவில்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.