கோத்தகிரி அருகே அரசு பள்ளியில் குவிந்து கிடக்கும் கட்டிடக்கழிவுகள்-உடனடியாக அகற்ற மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை

கோத்தகிரி அருகே உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் கட்டிடக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அதனைஅகற்ற வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2023-07-07 20:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் கட்டிடக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அதனைஅகற்ற வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கேர்பெட்டா அரசு பள்ளி

கோத்தகிரியிலிருந்து கோடநாடு செல்லும் சாலையில் கேர்பெட்டா பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 70 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி நுழைவு வாயில் அருகே பழமையான கட்டிடம் ஒன்று இருந்தது. கடந்த ஆண்டு பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த பழமையான கட்டிடங்களை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்த பழமையான வலுவிழந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதே போல கேர்பெட்டா அரசு நடுநிலைப் பள்ளியிலும் பழைய கட்டிடமும் இடிக்கப்பட்டது. அப்போது அந்த பள்ளியில் இருந்த நுழைவு வாயில் பாதுகாப்பு சுவரும் சேதமடைந்தது.

கட்டுமான கழிவுகள்

கட்டிடம் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் அந்த கட்டுமான கழிவுகள் பள்ளி வளாகத்தில் இருந்து அகற்றப்படாமல் உள்ளன. இதனால் குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது.

மேலும் பாதுகாப்பு சுவர் பழுதடைந்துள்ளதால் கால்நடைகளும் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் அகற்றப்படாமல் உள்ள கட்டிடக்கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் பாதுகாப்பு சுவர்களை புதுப்பிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்