தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர், கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு வந்த குண்டுப்பட்டி விடுதலை நகரை சேர்ந்த சிவா (வயது 24), பி.காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (39) ஆகிய இருவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஜித்குமார் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிந்து சிவா, ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.