பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் மீது வழக்கு

பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் மீது வழக்கு;

Update: 2023-04-13 18:45 GMT

நெகமம்

நெகமத்தை அடுத்த கரப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 27). இவர் அதே பகுதியில் வசிக்கும் சரஸ்வதி(48) என்பவரது வீட்டில் தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டிக் குழாயை எடுத்ததாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட சரஸ்வதியை, கார்த்திக் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரஸ்வதி நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நெகமம் போலீசார் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்