பெண்ணுக்கு கொலை மிரட்டல்

முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 13 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2023-07-09 20:00 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்த கண்ணன் மனைவி மதுராந்தகி (வயது 52). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் வீட்டை காலி செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் மதுராந்தகிக்கும், ராமசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராமசாமி உள்பட 13 பேர் சேர்ந்து மதுராந்தகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ராமசாமி உள்பட 13 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்