கொலை மிரட்டல் வழக்கில்: முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மனு

கொலை மிரட்டல் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மனு ஐகோர்ட்டு நோட்டீஸ்.

Update: 2023-02-17 18:46 GMT

சென்னை,

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனுக்கு எதிராக நீலகிரி மாவட்டம், மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் மணிக்கல் பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர் புகார் கொடுத்தார். அதில், எனக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தை புத்திசந்திரனுக்கு விற்பனை செய்ய மறுத்ததால், தோட்டத்தையே நாசம் செய்ததுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் புத்திசந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், புகார்தாரர் ராஜூ ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர். அவரது சகோதரரின் 12 சென்ட் நிலத்தைத்தான் வாங்க முயற்சித்தேன். அதற்காக, இப்படி பொய் புகார் கொடுத்து ராஜூ தேவையற்ற பிரச்சினை உருவாக்குகிறார். நான் யாரையும் மிரட்டவில்லை. எந்த ஒரு குற்றத்தையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், மனுவுக்கு பதில் அளிக்கும்படி மஞ்சூர் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்