மின்சாரம் பாய்ந்து இறைச்சிக்கடை உரிமையாளர் சாவு

மின்சாரம் பாய்ந்து இறைச்சிக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

Update: 2022-06-25 19:35 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 70). இவர் மேலமாத்தூர் கிராமத்தில் இறைச்சிக் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் ஆறுமுகம் நேற்று முன்தினம் கடையில் இறைச்சிக்காக கோழியின் இறகுகளை சுத்தம் செய்வதற்காக மின் எந்திர டிரம்மில் போட்டு இயக்கியுள்ளார்.அப்போது அவர் இரும்பு டிரம்மின் மீது கை வைத்தபோது எதிர்பாராதவிதமாக ஆறுமுகத்தின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கை மற்றும் தலை ஆகிய பகுதிகள் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி வள்ளியம்மை கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ஆறுமுகத்திற்கு 2 மகள்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்