சேலம் கள்ளுக்கடை பகுதியில் மது குடித்த இளைஞர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் கள்ளுக்கடை பகுதியில் மது குடித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.;

Update: 2023-06-19 15:15 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள கள்ளுக்கடை பகுதியில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உள்ள பாரில் கல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்ற இளைஞர் இன்று மாலை மது அருந்தியுள்ளார்.

இந்த நிலையில் மது அருந்திய கொஞ்ச நேரத்தில் மதுபானக்கடை பாரிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்த இளைஞர் மது அருந்தியதால் தான் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்