நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

தட்டார்மடம் அருகே ஒரு கல்லூரி நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்

Update: 2022-06-13 11:41 GMT

தட்டார்மடம்:

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த ஜெரி மகன் ஜெட்டா (வயது 17). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். ஜெட்டா சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சென்றார். குளித்துக் கொண்டு இருக்கும் போது, ஜெட்டா தண்ணீரில் மூழ்கி மயங்கினார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெட்டா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜெட்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்