லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு

Update: 2023-06-09 19:30 GMT

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மகன் சபரி (வயது 21) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நண்பர்கள் 2 பேருடன் ராயக்கோட்டையில் இருந்து ஓசூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். ராயக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு உள்ள வேகத்தடை அருகே சென்ற போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சபரி படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சபரியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்