கிருஷ்ணகிரி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அகஸ்தியர் தெருவை சேர்ந்தவர் சங்கர்குமார் (வயது 42). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 4-ந் தேதி அவர் பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். இந்த பஸ் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பக்கமாக வந்த போது, சங்கர்குமார் திடீரென்று மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.