ஓசூர்
பாகலூர் அருகே பெலத்தூர் பக்கமுள்ள தாளப்பள்ளியை சேர்ந்தவர் துளசிராம். இவரது மகன் வினய் பிரசாத் (வயது 18). இவர் நேற்று முன்தினம் தாளாப்பள்ளி ஏரியில் உறவினர் சத்ய நாராயணவுடன் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக வினய் பிரசாத் ஏரியில் மூழ்தி தத்தளித்தார். இதை கண்ட அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.