அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 மாடுகள் சாவு
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 மாடுகள் இறந்தன;
திருப்புவனம்
திருப்புவனம் யூனியன் கீழடி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் எருமை மாடும், அருகே உள்ள பள்ளிச்சந்தை புதூர் பகுதியைச் சேர்ந்த நிஜாம் என்பவரின் பசுமாடும், கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வயல்வெளியில் மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. எதிர்பாராதவிதமாக அந்த 2 மாடுகளும் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி அவை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.