கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலியானார்;

Update: 2023-04-05 18:45 GMT

திருப்புவனம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் ராமு (வயது 43). தொழிலாளியான இவர் பூவந்தி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று திருப்புவனம் வந்துவிட்டு பூவந்திக்கு மொபட்டில் சென்றார். அப்போது சிவகங்கையில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவரான விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (25) மீது பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்