மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி சாவு
சூளகிரி அருகே மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி இறந்தார்.;
சூளகிரி
சூளகிரி அருகே உள்ள கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் முரளி (வயது 43). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (34). இவர்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி பக்கமாக நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் முரளி, ஹரீஷ் மீது மோதியது. இந்த விபத்தில் முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரீஷ் படுகாயம் அடைந்தார். அதே போல மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த பெங்களூரு நடராஜ் (28), சந்துரு (25) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.