காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 58). பெயிண்டர். சம்பவத்தன்று பெரியசாமி அழகாபுரியில் இருந்து கோட்டையூரை நோக்கி சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த கிரேன், பெரியசாமி சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் மீது கிரேன் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் கிரேன் டிரைவர் ஓலைக்குடிபட்டியை சேர்ந்த பாண்டித்துரை(31) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.