சாலையோர பள்ளத்தில் விழுந்து கொத்தனார் பலி

சாலையோர பள்ளத்தில் விழுந்து கொத்தனார் பலியானார்;

Update: 2023-02-12 18:45 GMT

திருப்புவனம்

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள வளையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் திருமன் (வயது35). கொத்தனார். இவர் பரமக்குடியில் கொத்தனார் வேலை பார்த்து விட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்றார். திருப்புவனம் அருகே உள்ள வன்னிகோட்டை விலக்கு பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்