மின்சாரம் தாக்கி பெண் சாவு

ஊத்தங்கரை அருகே துணி காயவைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-28 18:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே துணி காயவைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கி பெண் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூன்றம்பட்டி ஊராட்சி வன்னியர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 52). இவர் நேற்று காலை வீட்டில் துணி துவைத்தார். பின்னர் அந்த துணியை வீட்டின் அருகில் இருந்த கம்பியில் காய வைக்க சென்றார்.

அப்போது கம்பி மீது துணியை போட்ட போது வீட்டில் உள்ள வேறு ஒரு மின் கம்பி அறுந்து துணி காயவைத்த கம்பி மீது விழுந்துள்ளது. அப்போது திடீரென கிருஷ்ணவேணியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கணவர் காயம்

இதை கவனிக்காமல் வெளியில் சென்று இருந்த ரங்கநாதன் வீட்டுக்கு வந்து அந்த கம்பியை பிடித்துள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் லேசான காயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் காயம் அடைந்த ரங்கநாதனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்