மின்கம்பம் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி

மின்கம்பம் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.;

Update: 2022-11-12 17:20 GMT

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது அய்யனார் குளம். இந்த ஊரை சேர்ந்த ராசு மகன் மகேசுவரன் (வயது35). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்தார். அய்யனார் குளம் பகுதியில் தோட்டங்களில் உழவு பணியை முடித்துவிட்டு மீண்டும் ஊரை நோக்கி வந்துள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் டிராக்டரை விட்டு குதித்து மகேசுவரன் தப்பினார். பின்னர் டிராக்டர் மின்கம்பத்தில் மோதியதால் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்தது. இதையடுத்து டிராக்டரை பரிசோதிக்க மகேசுவரன் சென்றபோது மின்கம்பி விழுந்து இருந்ததை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்தபநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மகேஸ்வரன் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்