அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2022-10-26 18:38 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி கடலூர் கிழக்கு குடியிருப்பை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் புரூஸ்லீ (வயது28). இவர் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது தொண்டியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. உடனே அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந் தார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மன்னார் குடியை சேர்ந்த பஸ் டிரைவர் ஜீவானந்தம் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்