கிரானைட் கல் விழுந்து தொழிலாளி சாவு

கெலமங்கலம் அருகே கிரானைட் கல் விழுந்து தொழிலாளி இறந்தார்.;

Update: 2022-08-12 17:58 GMT

ராயக்கோட்டை:

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிவான் ஹேம்ராம். இவருடைய மகன் ராகுல்ஹேம்ரா (வயது 20). கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்குவாலா (38) என்பவரும் நேற்று அதிகாலை கிரானைட் கல்லை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர், டிராலி டயரில் வைக்கப்பட்ட மரக்கட்டை ஆப்பை எடுக்க ராஜேஷ்குவாலா கடப்பாறையால் கிரானைட் கல்லை நெம்பிய போது ஒரு பகுதி உடைந்து ராகுல்ஹேம்ரா மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார். கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்