வேன் மோதி தொழிலாளி சாவு

தர்மபுரி அருகே வேன் மோதி தொழிலாளி இறந்தார்.;

Update: 2022-07-25 15:57 GMT

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 48). கட்டிட தொழிலாளி. இவர் தர்மபுரி- பென்னாகரம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்