கல் குவாரி தொழிலாளி சாவு

ஆந்திராவில் தாக்கப்பட்ட கல் குவாரி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-06-29 16:23 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள வெங்கட்டானூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 58). இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்கு முனியப்பனுக்கும், வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது முனியப்பன் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முனியப்பன் உயிரிழந்தார். இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்