தர்மபுரி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
தர்மபுரி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கோணம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர்கம்பைநல்லூர்-கிட்டம்பட்டி சாலையில் மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பழனிசாமி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.