மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு

மத்தூர், போச்சம்பள்ளி பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர்.

Update: 2022-06-17 16:27 GMT

மத்தூர் :

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோட்டூர் முருக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 55). மரம் ஏறும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கொடமண்டபட்டி பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய்களை வெட்டிய போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சேலத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போச்சம்பள்ளி அருகே உள்ள புட்டனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). தொழிலாளி. இவர் கடந்த மாதம் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பெயிண்டு அடித்தபோது மின்சாரம் தாக்கியது. அவர் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்