நல்லம்பள்ளி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு
நல்லம்பள்ளி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி இறந்தார்.;
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே குரும்பட்டியை சேர்ந்தவர் சித்தன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 13-ந் தேதி நல்லம்பள்ளியில் இருந்து தனியார் டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார். சேசம்பட்டி அருகே சென்றபோது சித்தன் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சித்தன் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.